search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனே வில்லியம்சன்"

    • வில்லியம்சன் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை.
    • 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்னேற்றம் காண்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    புனே:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் வருகிற 24 -ந்தேதி மராட்டிய மாநிலம் புனேயில் தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் இந்த டெஸ்டிலும் ஆட மாட்டார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களுருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆட வில்லை.

    இடுப்பு வலியில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் வில்லியம்சன் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

    வில்லியம்சன் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை. அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றும், 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்னேற்றம் காண்பார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 1-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 383 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
    • நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 179 ரன்களில் சுருண்டது.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.

    அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வில்லியம்சன் 0 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஸ்டார்க் ஓவரில் மிட் ஆப் திசையில் அடித்து விட்டு ஒரு ரன் எடுக்க வில்லியம்சன் ஓடிய போது எதிரே ஓடி வந்த யங் மீது மோதினார். இதனால் இருவரும் நடுபிட்சில் இருக்கும் போது ஆஸ்திரேலிய வீரர் லெபுசன் நேரடியாக ஸ்டெம்பில் அடித்தார்.

    இந்த ரன் அவுட் மூலம் அவரது 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வில்லியம்சன் ரன் அவுட் ஆகி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர்.
    • கில் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதையும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை. 

    2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த போட்டியின் மூலமும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

    பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது கடைசி வரை போராடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:-

    முதலில் நான் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உண்மையிலேயே இந்த போட்டியிலும் அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த போட்டியின் மூலமும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.

    உண்மையில் இந்திய அணியின் வீரர்கள் விளையாடிய விதமே அவர்களது வெற்றிக்கு காரணம். இருந்த போதும் நாங்கள் இன்றைய போட்டியில் போராடிய விதத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாக்அவுட் போட்டியில் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இந்தியா போன்ற ஒரு தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம்.

    இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டது. இந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் மிகச்சிறப்பாக ஆதரவளித்தனர். ஆனாலும் ரசிகர்கள் இந்திய அணிக்காக மட்டுமே ஒருதலை பட்சமாக இருந்ததாக நினைக்கிறேன். இருந்தாலும் இங்கு இவ்வளவு பேர் மத்தியில் விளையாடியதையும் இந்தியா இந்த தொடரையும் நடத்தியதும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.

    ஒரு அணியாக நாங்கள் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாகவே விளையாடி வந்தோம். இந்த தொடரில் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்சல் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பெஷல் பிளேயர்களாக திகழ்ந்தனர். பவுலர்களும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டனர். ஒரு அணியாக நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர காத்திருக்கிறோம்.

    இவ்வாறு கேன் வில்லியம்சன் கூறினார்.

    • எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்ட வில்லியம்சன், கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • வலதுகாலில் கட்டு போட்டநிலையில் கம்பூன்றியபடி அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி வைரலானது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். சென்னைக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்டபோது கீழே விழுந்ததில் வலது கால்முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் நடையை கட்டிய அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

    இதையடுத்து அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினார். வலதுகாலில் கட்டு போட்டநிலையில் கம்பூன்றியபடி அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி வைரலானது.

    இந்த நிலையில், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தியாவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவர் அணியில் இருந்து விலக நேரிட்டால், டாம் லாதம் அணியை வழிநடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவியது.
    • வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் முக்கியமான வீரர் கேல் வில்லியம்சன் விளையாடினார். குஜராத் அணியின் பவுலிங்கின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை பிடிக்க முயன்ற போது, அவரது காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் பாதிலேயே அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவியது.

    இந்த நிலையில் குஜராத் அணிக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஸ்டீவ் ஸ்மித் பதில் அளித்துள்ளார்.

    அதில், நான் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பதிவு செய்யவில்லை. அதனால் மாற்று வீரராக என்னை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களையே மாற்று வீரர்களாக அணி நிர்வாகங்களால் ஒப்பந்தம் செய்ய முடியும். அதனால் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யாத ஸ்டீவ் ஸ்மித் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக மட்டுமே செயல்படுவார். டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் வரிசையிலேயே ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடல் நலம் சரியில்லாத நிலையில் உள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?.
    • நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் இன்று நடக்கும் கடைசி போட்டியில் களமிறங்குவதை உறுதிப்படுத்தி உள்ளார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்குகிறது.

    முதல் 2 போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய முயற்சி செய்யும். 3 போட்டிகளிலும் வென்று தொடரை முழுமையாக வெல்ல இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.

    கொரோனா பாதிப்பு காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் இன்று நடக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டியில் களமிறங்குவதை உறுதிப்படுத்தி உள்ளார். உடல் நலம் சரியில்லாத நிலையில் உள்ள இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    • நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜோரூட் தேர்வு செய்யப்பட்டார்.

    3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் லேசான கொரோனா தொற்று காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லியம்சனுக்கு பதிலாக ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இவர் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×